புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (12:43 IST)

பேங்க் அக்கவுண்ட் இல்ல.. அட்ரஸ் இல்ல..! – லாட்டரி சீட்டு வென்ற தொழிலாளிக்கு போலீஸ் உதவி!

கேரளாவில் லாட்டரி சீட்டு வென்ற கூலி தொழிலாளிக்கு போலீஸர உதவி செய்து பணம் பெற்று கொடுத்துள்ளனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரதீபா மண்டல் என்பவர் கேரளாவில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது குடும்பம் மேற்கு வங்கத்தில் இருந்தாலும் இவர்களுக்கு நிலையான முகவரி இல்லை. இந்நிலையில் கேரளாவில் பிரதீபா வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.30 லட்சம் பரிசு விழுந்துள்ளது.

இந்நிலையில் தன்னிடமிருந்து யாராவது லாட்டரி சீட்டை பறித்துக் கொள்வார்கள் என்று பயந்த பிரதீப் அருகிலுள்ள காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து உதவி கோரியுள்ளார். அவருக்கு பரிசு விழுந்துள்ளதை உறுதி செய்த போலீஸார் இதுதொடர்பாக வங்கியிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஆனால் பிரதீபாவுக்கு வங்கி கணக்கும், சரியான முகவரியும் இல்லாத நிலையில் தற்போது அவர் பணிபுரியும் முகவரியை தற்காலிகமாக வைத்து வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வங்கி கணக்கில் லாட்டரி பணத்தை டெபாசிட் செய்ய கேரள போலீஸார் பிரதீபாவையும், லாட்டரி சீட்டையும் பத்திரமாக வங்கிக்கு அழைத்து சென்று பணத்தை டெப்பாசிட் செய்ய உதவியுள்ளனர்.