தொடர்புடைய செய்திகள்
- தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த அமைச்சர் ஜெயகுமார்: ஏன் தெரியுமா?
- மஹா சிவராத்திரி அன்று அபிஷேகம் செய்ய ஏற்ற பொருட்கள் என்ன....?
- ”என் மகள் அப்படி முழக்கமிட்டது தவறுதான்”.. ”பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என முழங்கிய மாணவியின் தந்தை வருத்தம்
- சிவபெருமானின் உடல் முழுவதும் விபூதி பூச காரணம் என்ன...?
- இரவில் தொப்புளில் தினமும் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் என்ன நன்மைகள்...?
நாடு முழுவதும் என்.ஆர்.சி இல்லை: முதல்வரிடம் பிரதமர் உறுதி
நாடு முழுவதும் என்.ஆர்.சி இல்லை
என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டு முறை நாடு தழுவிய அளவில் நடைமுறைக்கு வராது என்று பிரதமர் மோடி தனக்கு உறுதி அளித்துள்ளதாக மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்ற பின்னர் இன்று முதல்முறையாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த உத்தவ் தாக்கரே, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் என்.ஆர்.சி குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாகவும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து யாரும் அச்சம் கொள்ளதேவையில்லை என்றும், இதனால் சிறுபான்மை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் மாறாக பலன் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் என்.ஆர்.சி. நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தபோதிலும் நாடு முழுவதும் இதனை அமல்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என பிரதமர் தன்னிடம் உறுதி அளித்துள்ளதாகவும் மகாராஷ்டிரா முதல்வர் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
