1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (19:15 IST)

பட்னாவிசை பதவி ஏற்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து சிவசேனா மனு !

பட்னாவிசை பதவி ஏற்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து சிவசேனா மனு !
இன்று பாஜகவின் ஃபட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு( பட்னாவிஸ் மற்றும் அஜித் பவர்) ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக  ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங். கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. 
 
மேலும், ஆளுநரின் முடிவு அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது என சிவசேனா விமர்சித்துள்ளது.அதனால் மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.