திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (17:43 IST)

சிட்டாய் பறந்த அதிருப்தி எம்எல்ஏக்கள்: டெல்லியில் மீட்?

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 9 அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்தான இழுபறி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.    
 
முன்னதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி ஆகிய கட்சிகள் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பது குறித்தான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.    
 
ஆனால் இன்று மஹாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியெற்றுள்ள நிலையில், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித்பவார் பதவியேற்றுள்ளார்.  இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், எங்கள் பக்கம் 156 எம்எல்ஏக்கள் உள்ளனர் என கூரி வரும் சரத்பவாருக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 9 அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.