புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:40 IST)

கொரோனா பரிசோதனைக் கட்டணத்தை நான்காவது முறையாக குறைத்த மாநிலம்! புதிய கட்டணங்கள் அறிவிப்பு!

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது.

கொரோனா காரணமாக இந்தியாவில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. அங்கு கொரோனா தடுப்புப் பணிகளுக்கு பெரிய அளவில் பலன் இல்லை. அங்கு இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அது போல பலி எண்ணிக்கையிலிம் அம்மாநிலமே முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனைக் கட்டணங்களை அம்மாநில அரசு நான்காவது முறையாக குறைத்து அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள அம்மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் தோப் புதிய கட்டணமாக .ரூ 900, ரூ.1,400 மற்றும் ரூ.1,800 என இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.