தமிழகத்தில் இன்று 2708 பேருக்கு கொரோனா: சென்னையில் எவ்வளவு?

Virus
தமிழகத்தில் இன்று 2708 பேருக்கு கொரோனா
siva| Last Updated: திங்கள், 26 அக்டோபர் 2020 (19:45 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 2708 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 711,713 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. .
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 2708 பேர்களில் 747 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 32 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 10956 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 4014 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 671,489 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று 70898 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,28,347 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :