வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 ஜூலை 2023 (11:48 IST)

நள்ளிரவில் தீப்பற்றிய பேருந்து; 25 பேர் உடல் கருகி பலி! – மகாராஷ்டிராவில் சோகம்!

Bus Fre
மகாராஷ்டிராவில் பேருந்து திடீரென தீப்பற்றிய விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மகாராஷ்டிராவின் புல்தானா பகுதியில் சென்ற பேருந்து ஒன்றில் 32 பயணம் செய்துள்ளனர். நள்ளிரவில் சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. பேருந்தின் கதவுகளை திறக்க முடியாமல் உள்ளே சிக்கிய பயணிகளில் 25 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீக்காயங்களுடன் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவு 2 மணியளவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Edit by Prasanth.K