மகாராஷ்டிரா கட்டிட விபத்து... முடியாத மீட்பு பணி; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே என்ற பகுதியில் மூன்று அடுக்கு கொண்ட கட்டிடம் ஒன்று கடந்த 1984 ஆம் ஆண்டு கட்டியதாக தெரிகிறது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 21 வீடுகள் இருந்ததாகவும் அனைத்து வீடுகளிலும் பொது மக்கள் குடியிருந்ததாகவும் தெரிகிறது.
இதனிடையே நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென இந்த கட்டிடத்தின் பாதி அளவு சரிந்தது. இந்த கட்டிடத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் தூக்கத்திலேயே பலர் என்ன நடந்தது என்பது தெரியாமலேயே 8 பேர் பலியாகினர் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.
கட்டிட விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீட்க்கப்பட்டவர்களில் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவியும் மருத்துவமனையில் காயங்களுடன் உள்ளோருக்கு இலவச சிகிச்சையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.