1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2020 (07:20 IST)

மகாராஷ்டிராவில் அதிகாலையில் நடந்த பயங்கர விபத்து: 8 பேர் பலி!

மகாராஷ்டிராவில் அதிகாலையில் நடந்த பயங்கர விபத்து: 8 பேர் பலி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே என்ற பகுதியில் மூன்று அடுக்கு கொண்ட கட்டிடம் ஒன்று கடந்த 1984ஆம் ஆண்டு கட்டியதாக தெரிகிறது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 21 வீடுகள் இருந்ததாகவும் அனைத்து வீடுகளிலும் பொது மக்கள் குடியிருந்ததாகவும் தெரிகிறது 
 
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென இந்த கட்டிடத்தின் பாதி அளவு சரிந்தது. இந்த கட்டிடத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் தூக்கத்திலேயே பலர் என்ன நடந்தது என்பது தெரியாமலேயே 8 பேர் பலியாகினர் 
 
மேலும் இதுவரை 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு தாகவும் மேலும் 20 முதல் 25 பேர் வரை கட்டிடத்தில் சிக்கியிருப்பவர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கட்டிட விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது