ஓடிப்போ கொரோனா சனியனே..! – தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு ஓடிய கிராம மக்கள்!

Madhya Pradesh
Prasanth Karthick| Last Modified வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:35 IST)
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவை விரட்ட மத்திய பிரதேச கிராம மக்கள் தீப்பந்தம் கொளுத்தி கொண்டு ஓடிய சம்பவம் வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், உலக அளவில் கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தை அடைந்துள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவற்றால் நாடு தள்ளாட்டத்தை சந்தித்துள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் அகர் மல்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மக்கள் இரவு நேரத்தில் கைகளில் தீப்பந்தத்தை கொளுத்திய படி “ஓடு கொரோனா ஓடு” என இந்தியில் கத்திக் கொண்டு ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :