திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:32 IST)

சமந்தாவின் படம் 300 திரையரங்குகளில் தமிழ்நாட்டில் ரிலீஸ்!

ராம்சரண் தேஜா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற ரங்கஸ்தலம் திரைப்படம் தமிழில் அதே பெயரில் டப்பிங் ஆக உள்ளது.

ராம்சரண் தேஜா ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது. இதனால் தமிழில் நல்ல் மார்க்கெட் தனக்கு உருவாகும் என ராம்சரண் தேஜா நம்பி இருக்கிறார். அதனால் தனது பழைய ஹிட் படமான ரங்கஸ்தலம் படத்தை டப்பிங் செய்து அதே பெயரில் மே மாதம் ரிலிஸ் செய்ய உள்ளாராம்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 300 திரையரங்குகளில் அந்த திரைப்படம் ரிலீஸாக உள்ளதாம். கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் புதுப்படங்கள் எதுவும் ரிலீஸாகததால் ரங்கஸ்தலம் படத்துக்கு அதிக திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.