ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (11:38 IST)

தடுப்பூசி போடுங்க.. டிவியை வெல்லுங்க..! – மகாராஷ்டிராவில் அசத்தல் அறிவிப்பு!

இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மராட்டியத்தில் உள்ள மாநகராட்சி அறிவித்துள்ள பரிசு வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த சில மாதங்களில் இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன.

எனினும் பல பகுதிகளில் மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்ய பல்வேறு சலுகைகளையும் அந்த நகர, கிராம நிர்வாகங்கள் அறிவிப்பது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் உள்ள சந்திரப்பூர் மாநகராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு எல்இடி டிவி பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிவிக்காக மக்கள் பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.