ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: செவ்வாய், 31 ஜனவரி 2023 (18:06 IST)

சுழற்பந்துக்கு சாதகமாக ஆடுகளம்.. லக்னோ ஆடுகள வடிவமைப்பாளர் பணிநீக்கம்!

india won
சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் அமைத்ததாக லக்னோ ஆடுகள வடிவமைப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டி சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்ததாக கூறப்பட்டது.
 
40 ஓவர்களில் 30 ஓவர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் வீசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லக்னோ மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பதிலாக சஞ்சய் குமார் அகர்வால் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் உத்தரப்பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva