திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (15:47 IST)

21 கோடி ரூபாய் லாட்டரி பரிசு; கேரள டிரைவருக்கு துபாயில் அதிர்ஷ்டம்

துபாயில் கார் டிரைவராக வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த டிரைவருக்கு லாட்டரியில் 21 கோடி ரூபாய் விழுந்துள்ளதால் அவர் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் ஜான் வர்கீஸ். இவர் கடந்த 2016 முதல் துபாயில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். 
 
இதனையடுத்து ஜான் வர்கீஸிற்கு இன்ப அதிர்ச்சி அழைக்க போன் கால் வந்தது. அதில் லாட்டரி சீட்டில் 21.21 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்தனர். மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவர், இதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.
 
பரிசுத் தொகையை வைத்து ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமென்றும், குழந்தை படிப்பிற்கு செலவழிக்கப் போவதாகவும் தெரிவித்தார். ஒரு பகுதித் தொகையை இல்லாதோருக்கு அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.