பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால் திருநங்கை குழந்தைதான் பிறக்கும்: பேராசிரியரின் சர்ச்சை பேச்சு
கேரளாவில் உள்ள ஒரு பேராசிரியர் ஆண்கள் போல் பெண்கள் உடை அணிந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை திருநங்கை குணம் கொண்டதாக இருக்கும் என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறி கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்
கேரள மாநிலத்தில் உள்ள கல்லடி என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக ரஜித் குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, ''ஒரு பெண், ஆண் போல உடை அணிந்தால், அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை திருநங்கை குணம் கொண்டதாகவே இருக்கும். ஏற்கெனவே கேரளாவில் 6 லட்சம் திருநங்கைகள் உள்ளார்கள். தற்போது, கேரள பெண்கள் அதிகளவில் ஜீன்ஸ் அணிவதால் இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.
மேலும் புரட்சி செய்யும் ஆண்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது' என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை ரஜித்குமார் கூறியுள்ளார். இவருடைய கருத்துக்கு பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பேராசிரியர் ரஜித் குமார் மீது வழக்குக் தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.