திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 5 ஏப்ரல் 2018 (12:50 IST)

கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் குடும்பத்திற்கு ரூ. 1.5 லட்சம் நிதியுதவி - வீரேந்திர சேவாக்

கேரளாவில் அரிசி திருடியதாக அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் குடும்பத்திற்கு கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ரூ. 1.5 லட்சம் நிதியுதவி அளிக்க  உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதி பொதுமக்கள்,  அரிசி திருடியதாக கூறி மது என்ற ஆதிவாசி நபரை அடித்து கொன்றனர். ஆனால் அரிசி திருடியதாக அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு தவறானது என்று தெரிய வந்ததால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
அவர் அடித்து கொல்லப்படுவது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளங்களில் பார்த்த மக்கள், மதுவை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர். கேரள முதல்வர் பினராஜி விஜயன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும் மதுவின் தங்கைக்கு போலீஸ் பணி வழங்கப்பட்டது. 
இச்சம்பவத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர், வீரேந்திர சேவாக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் வீரேதர் ஷேவாக் வரும் 11 ஆம் தேதி, மதுவின் தாயாரை நேரில் சந்தித்து ரூ. 1.5 லட்சத்திற்கான காசோலையை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.