1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. lorry minibus crash accident 10 people dead

லாரி மீது மினி பேருந்து மோதிய விபத்து: 10 பேர் பரிதாப பலி

மகாராஷ்டரா
மகாராஷ்டிராவில் லாரி மீது மினி பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலம் சந்த்வட் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு மணல் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு வந்த மினி பேருந்து எதிர்பாராதவிதமாக லாரி மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
மேலும் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
கர்நாடகாவில் வெளியானது காலா - முடிவுக்கு வந்த பஞ்சாயத்து