ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2024 (15:52 IST)

வெற்றி வாய்ப்பில் 6 சுயேட்சை வேட்பாளர்கள்.. இப்பவே தூண்டில் போட தொடங்கிய தேசிய கட்சிகள்!

BJP Congress
மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள 6 சுயேட்சை வேட்பாளர்கள் பக்கம் தேசிய கட்சிகளின் கவனம் திரும்பியுள்ளது.



இந்தியா முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 295 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸின் இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னணியில் உள்ளது. பிற கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த தேர்தலில் தற்போதைய நிலவரப்படி தேசிய கட்சி வேட்பாளர்களையும் தாண்டி 6 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னணி வகிக்கின்றனர். பஞ்சாபில் இரண்டு பேர் முன்னணியில் உள்ளனர். இதுதவிர மகாராஷ்டிரா, டையூ டாமன், காஷ்மீரிலும் சுயேட்சையாக சிலர் முன்னணியில் உள்ளனர்.

இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர்களிடம் இப்போதே பெரிய டீல்களை அரசியல் கட்சிகள் பேசத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் பெரும்பான்மை பெறுவதற்காக வேறு சில கட்சிகளுடன் பேசி வரும் நிலையில், இந்த சுயேட்சைகளையும் ஈர்க்க திட்டமிடுவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K