ஊரடங்கு மட்டும் அமல்படுத்தப் படாவிட்டால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் முடிவு!
இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி வரை இருக்கும் இந்த ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் கணிசமான அளவு கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 23,452 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஆறுதலாக சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ள நிதி ஆயோக் குழு உறுப்பினர் வி கே பவுல் ‘ சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியதால் 23,000 பேர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஒருவேளை ஊரடங்கு அமல்படுத்தாமல் இருந்திருந்தால் இந்த நேரத்திற்கு இந்தியா முழுவதும் 73,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பர் .’ எனத் தெரிவித்துள்ளார்.