வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2020 (10:37 IST)

Lockdown 2.0: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு!!

ஊரடக்கின் போது கடைபிடிக்க வேண்டிய சிலவற்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  

 
இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு முடிந்த நிலையில் வீடியோ மூலம் பேசிய மோடி மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவித்தார். 
 
இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள உள்ள ஊரடக்கின் போது கடைபிடிக்கவேண்டிய சிலவற்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  
 
1. ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி.
2. மே 3 வரை அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து (பேருந்து, ரயில், விமான சேவைகள்)
3. மக்கள் கூடும் அனைத்து இடங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்க மே 3 வரை தடை
4. ஏப்ரல் 20-ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்
5. மாநிலங்களுக்கிடையே, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து கிடையாது. 
6. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதி. 
7. மாநில அரசு நெறிமுறைகள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் 
8. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம்

9. வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி
10. கட்டுமானப்பணிகள் நடைபெறவும் மத்திய அரசு அனுமதி