கொரோனா வைரஸ் - உயரும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,000-த்தை நெருங்க உள்ளது.
இந்தியாவில் தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் நடந்த மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்களால் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834 ஆக அதிகரித்தும் இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 144 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.