1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (11:43 IST)

கட்டுபாடுகளுடன் இயங்கும் பேக்கிரிகள்: என்ன கிடைக்கும்; என்ன கிடைக்காது...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று முதல் தனி மனித இடைவெளியுடன் பேக்கரி கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டொர் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 14 வரை இருக்கும் ஊரடங்கு அதன் பின்னர் நீட்டிக்கப்படுமா என்பதை பிரதமர் அறிவிப்பிற்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என தமிழக முதலவ்ர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  
 
இந்நிலையில், காலை  6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகளை திறக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி சில கட்டுப்பாடுகளுடன் பேக்கிரிகள் இயங்கி வருகின்றன. 
 
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று முதல் தனி மனித இடைவெளியுடன் பேக்கரி கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பேக்கரி கடைகளில் பிரெட் மட்டுமே விற்க மாவட்ட எஸ்பி அனுமதியளித்துள்ளார். இனிப்பு, கார வகைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.