1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (11:25 IST)

மொட குடியா இருக்கே… ஒரே வாரத்தில் 624 கோடிக்கு மது விற்பனை!

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 624 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்.


கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையையொட்டி 5 நாட்களில் மட்டுமே 324 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடைபெற்றிருக்கிறது. ஆம், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 4 ஆம் தேதி வரை 324 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக கேரள மாநில மதுபான கழகம் தெரிவித்துள்ளது.

விஸ்கி, பிராந்தி, பீர் வகைகள் அதிகளவு விற்பனையாகியுள்ளது என கேரள மாநில மதுபான கழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 248 கோடி ரூபாய்க்கு மட்டும் மது விற்பனை நடைபெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 624 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கேரளாவின் மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கொல்லம் ஆசிரம விற்பனை கடையில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.