1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 19 ஜூன் 2024 (16:38 IST)

மதுபான முறைகேடு வழக்கு.! கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு..!!

arvind kejriwal
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் வரும் ஜூலை 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
 
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது டெல்லி  திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
 
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு எதிரான கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்ற காவலை எதிர்த்து இடைக்கால நிவாரணம் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
 
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மதுபானக் கொள்கை முறைகேடு மூலம் கிடைத்த பணத்தை பஞ்சாப் மற்றும் கோவா தேர்தல்களில் ஆம் ஆத்மி பயன்படுத்தியது என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. 

 
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில்,  கெஜ்ரிவால் வீடியோ கான்பரன்சிங் மூலம் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.