1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 ஜூன் 2024 (18:35 IST)

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

arvind kejriwal
நேற்றுடன் மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் அவை போலியாக தயாரிக்கப்பட்டவை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.



நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. அனைத்து தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. நேற்றுடன் 7 கட்ட தேர்தல்களும் நடந்து முடிந்த நிலையில் பல முன்னணி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டனர். அதில் பெரும்பாலும் பாஜகவே அதிக இடங்களில் வெல்லும் என்றும், மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் போலியானவை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்துமே போலி. ராஜஸ்தானில் மொத்தமே 25 தொகுதிகள்தான் உள்ளது. ஆனால் ஒரு கருத்துக்கணிப்பில் பாஜக ராஜஸ்தானில் 33 தொகுதிகளில் வெல்லும் என சொல்கிறார்கள். பாஜகவுக்கு நிறைய சீட் கொடுங்கள் என மேலே இருந்து உத்தரவு வந்ததும் ஒரு மாநிலத்தில் உள்ள சீட்டை விட அதிக சீட்டில் வெற்றிபெறும் என சொல்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இரண்டு நாட்களே இருக்கும்போது இப்படி ஒரு கருத்துகணிப்பு வெளியிடுவதன் அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Edit by Prasanth.K