வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 30 டிசம்பர் 2023 (09:26 IST)

திருமலையில் மீண்டும் சிறுத்தை, கரடிகள் நடமாட்டம்: பக்தர்களுக்கு எச்சரிக்கை..!

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் காட்டு பகுதியில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் இருப்பதை எடுத்து வனத்துறையினர் திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமலைக்கு  செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் இருந்தது அடுத்து வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்தனர்

இந்த நிலையில் மீண்டும் திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியில் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கண்காணிப்பு கேமராவில் இருந்து பதிவான காட்சிகளை வெளியிட்டு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு மலை பாதையில் செல்லும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு கையில் வழங்கப்படும் கைத்தடியை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran