1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2023 (07:59 IST)

ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. இலவச வீட்டுமனை.. அசத்தும் திருப்பதி தேவஸ்தானம்..!

tirupathi
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தங்களது ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு மற்றும் இலவச வீட்டுமனை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள்  பணி செய்து வரும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் 5000 ஊழியர்களுக்கு  இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும்  அதேபோல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  

அதேபோல் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென சம்பள உயர்வு மற்றும் இலவச வீட்டு மனை அறிவிப்புகளை தேவஸ்தான வெளியிட்டுள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்  

அதுமட்டுமின்றி தேவஸ்தான ஊழியர்களுக்கு இன்னும் சில இன்ப அதிர்ச்சி தரும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva