திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (18:45 IST)

வெடித்து சிதறிய எல்இடி டிவி: படம் பார்த்து கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு..!

LED TV
வெடித்து சிதறிய எல்இடி டிவி: படம் பார்த்து கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு..!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் எல்இடி டிவி ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் படம் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் பலியானதாகவும் இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் என்ற பகுதியில் எல்இடி டிவி திடீரென வெடித்தது. இதனையடுத்து படம் பார்த்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவருடன் டிவி பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
இந்த சம்பவம் காரணமாக வீட்டில் சுவர் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்இடி டிவி வெடித்தவுடன் அதனுடைய கூர்மையான துகள்கள் இளைஞரின் முகத்தில் ஆழமாக பதிந்ததால் பலியானதாக தெரிகிறது
 
 மேலும் குண்டு வெடிப்பு சம்பவம் போல் எல்இடி டிவி வெடித்த சத்தம் பக்கத்து வீட்டிலும் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran