1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Thuthuvalai herb full of medicinal properties!!

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள தூதுவளை மூலிகை !!

Thuthuvalai
தூதுவளை என்பது உணவிலும் மருத்துவத்திலும் அதிகம் பயன்படும் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை கொடியாகும். இதன் இலை, பூ, காய், பழம், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.


குறிப்பாக ஆஸ்துமா நோய்க்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும், தாது விருத்தி அதிகரிக்கும், ஆண்மை சக்தியும் பெருகும்.

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பு களையும், பற்களையும் பலமாக்கும். தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து, அதனுடன் நெய் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியாகி இரும்பு போல உறுதியுடன் இருக்கும்.

தூதுவளை நல்ல செரிமானத்தை அளிக்கக் கூடியது. எனவே அஜீரண கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

அனைத்து வயதினரும் தொடர்ந்து தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடையும். இது மூளையில் இருக்கும் செல்களை தூண்டி நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது. தூதுவளை இலை பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வெகு விரைவிலேயே நீரிழிவு கட்டுப்படும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
பச்சை பட்டாணியை தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நன்மைகள்...?