வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (16:35 IST)

ஹிட் படத்தின் பார்ட் 2 எடுக்க இயக்குனர் முருகதாஸ் ஆர்வம்… இடியாப்ப சிக்கல் தீருமா?

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார் என்று சொல்லப்படுகிறது.

அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம். இது சம்மந்தமாக பல ஹீரோக்களுக்கு அவர் கதை சொல்லி உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்போது தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக அவர் சூர்யாவிடம் பேசி உள்ளதாகவும், அவரும் ஆர்வமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் கஜினி படத்தின் தயாரிப்பாளர் தரப்போடு சூர்யா மற்றும் முருகதாஸ் இருவருக்குமே பிரச்சனை ஏற்பட்டு அது தீராமல் இருப்பதால் இப்போது இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சி எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது கேள்விக்குறிதான் என்றும் சொல்லப்படுகிறது.

Edited by vinot