1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (13:24 IST)

சட்டப் பல்கலை. தேர்வில் பழைய வினாத்தாள்: மாணவர்கள் அதிர்ச்சி

exam
சட்டப் பல்கலை தேர்வில் பழைய வினாத்தாள் கொடுத்ததை அடுத்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
மும்பை பல்கலைக்கழகத்தில் நேற்று சட்ட படிப்புக்கான தேர்வு நடைபெற்றபோது அதில் முந்தைய ஆண்டுக்கான வினாத்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 
 
அதன்பின் தவறுதலாக கடந்த ஆண்டு வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை எடுத்து மாணவர்களிடம் இருந்து அனைத்து வினாத்தாள்களில் திரும்ப பெற்றனர்
 
அதன் பிறகு பிற்பகல் வந்து தேர்வு எழுதுமாறு மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆன்லைன் டெலிவரி முறையில் கல்லூரிகளுக்கு வினாத்தாள் அனுப்பப்படும் நிலையில் முந்தைய ஆண்டு கால வினாத்தாள் தவறுதலாக அனுப்பப்பட்டதால் இந்த குழப்பத்திற்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இதனால் மாணவர்கள் மன ரீதியில் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது 
 

Edited by Siva