1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 6 அக்டோபர் 2022 (10:32 IST)

பள்ளி சுற்றுலா பேருந்து பயங்கர விபத்து! மாணவர்கள் பரிதாப பலி! – கேரளாவில் சோகம்!

Bus accident
கேரளாவில் பள்ளி சுற்றுலா சென்ற பேருந்து அரசு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு ஊட்டிக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுற்றுலா பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் உட்பட 51 பேர் பேருந்தில் பயணித்துள்ளனர்.


இந்த பேருந்து பாலக்காடு – வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற அரசு பேருந்தில் பலமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Edited By: Prasanth.K