1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (12:41 IST)

கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலியா? அதிர்ச்சி தகவல்!

dead
கேரளாவில் ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் நரபலி கொடுத்ததாக கூறப்படும் நிலையில் மேலும் 12 பெண்கள் நரபலி செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரளாவைச் சேர்ந்த தம்பதிகள் சுகமாக வாழவும் அதிக பணம் சம்பாதிக்கவும் பூஜை செய்ததாகவும் அந்த பூஜையில் போலி மந்திரவாதிகள் பேச்சை கேட்டு இரண்டு பெண்களை நரபலி கொடுத்ததாக கூறப்பட்டது
 
அதுமட்டுமின்றி நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல்களை வெட்டி சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா என்ற மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 12 பெண்கள் மாயமாகியுள்ளதால் அவர்களும் நரபலிக்கு பலியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran