புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 30 ஜூன் 2019 (13:58 IST)

வனத்துறை பெண் அதிகாரியை கம்பால் அடித்த எம்.எல்.ஏ சகோதரர்: அதிர்ச்சி வீடியோ

தெலுங்கானா மாநிலத்தில் பெண் வன அதிகாரி ஒருவரை எம்.எல்.ஏ ஒருவரின் சகோதரரும் அவருடைய ஆட்களும் கம்பால் அடித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் ரூ.80 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் காலேஸ்வரம் பல்நோக்கு உயர் மட்ட நீர்ப்பாசன திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். காலேஸ்வரம் கிராமத்தில் பிராணஹிதா மற்றும் கோதாவரி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் தொடங்கும் இந்த திட்டத்தால் ஐதராபாத் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுவதோடு, விவசாய நிலத்திற்கும் தண்ணீர் கிடைக்கும். இந்த திட்டத்துக்காக அதிகபட்சமாக 139 மெகாவாட் திறன் வாய்ந்த பம்புகள் தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படுகின்றன. உலகில் வேறெங்கும் இப்படி பயன்படுத்தப்படவில்லை
 
ஆனால் இந்த திட்டத்திற்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சிர்புர் என்ற பகுதி மக்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வன அதிகாரி அனிதா அவர்களின் தலைமையில் ஒரு குழுவினர் இந்த திட்டத்திற்காக ஆய்வு செய்ய சிர்புர் பகுதிக்கு வந்தனர். அப்போது சிர்புர் எம்.எல்.ஏவின் சகோதரர் ஒரு கும்பலுடன் வந்து அனிதா உள்பட வனத்துறை அதிகாரிகளை பெரிய பெரிய கம்பால் தாக்கினர். இதில் வனிதா படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.