இவளோட போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது: சந்திரமுகியாக மாறிய வனிதா

Last Modified வெள்ளி, 28 ஜூன் 2019 (09:13 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது போட்டியாளராக கலந்து கொண்ட மீராமிதுன் மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை, அபிராமியும் வனிதாவும் அவரை வச்சு செய்து வருகின்றனர். தினமும் மீராவை அழவைத்து வேடிக்கை பார்ப்பதில் அவர்கள் இருவருக்கும் ஒரு சந்தோஷம் போல் தெரிகிறது. குறிப்பாக வனிதா, முழுதாக சந்திரமுகியாக மாறி மீராவை உண்டு இல்லை என்று செய்து வருகிறார்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் மீராவை மீண்டும் அழ வைத்த வனிதா, 'இவளோட போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது' என்றும், கொடுக்க வேண்டிய இடத்தில் கரெக்டாக கொடுப்பேன் என்றும் கூறி டார்ச்சர் செய்கிறார்.

மீராமிதுன் அழுது கொண்டே 'நான் வந்ததில் இருந்து எவ்வளவு வேலை பார்த்துள்ளேன் என்று இந்த கேமிராவுக்கு தெரியும் என்றும், என்னை ஒருநாளைக்கு ஒருதடவை அழ வைக்கலைன்னா இவங்க யாருக்குமே தூக்கம் வராது என்றும், எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கின்றது என்றும், இப்படியெல்லாம் என்னால இருக்க முடியாது, நான் அந்த மாதிரி கேரக்டர் கிடையாது' என்றும் அழுது கொண்டே கூறுகிறார். ஆக மொத்தம் மற்ற போட்டியாளர்கள் அனைவரையும் பின் தள்ளிவிட்டு மீராமிது அனைவர் பார்வையையும் தன்பக்கம் இழுத்துவிட்டார் என்பது மட்டும் அப்பட்டமாக தெரிகிறதுஇதில் மேலும் படிக்கவும் :