ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 30 ஜூன் 2019 (12:25 IST)

தலைதூக்கும் வன்முறை : ஜெய் ஸ்ரீ ராம் சொல்லாத சிறுவன் மீது தாக்குதல்!

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் சில காலமாகவே இந்துத்துவா அமைப்பினர் சிறுபான்மை அமைப்பினரை  கட்டாயமாக ஜெய்ஸ்ரீராம் சொல்ல வேண்டுமெனக் கட்டாயப்படுத்தி துன்புறுத்தி வருகின்றனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் ஒரு இஸ்லாகிய சிறுவனை , ஜெய்ஸ்ரீ ராம் சொல்லுமாறு இந்துத்துவா அமைப்பினர் கட்டாயப்படுத்தியுள்ளனர். அதை அந்த சிறுவன் சொல்லாமல் இருந்ததால் அவனை இரவு முழுவதும் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதுமட்டுமல்லாமல் உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு 16 வயது சிறுவன் மீது இந்துத்துவா அமைப்பினர் கொடூரமாக தாக்குதல்நடத்தியுள்ளனர்.
 
கான்பூரிலும் ஒரு சிறுவன் தொழுகை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்க்கும் போது, அவனை வழிமறித்த இந்துத்துவா அமைப்பினர், அவனிடம் ஜெய்ஸ்ரீராம் சொல்லும்படி கூறி, தலையில் குல்லா அணியக்கூடாது என அவனை தாக்கியுள்ளனர். பின்னர் அருகில் உள்ளவர்கள் அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
அண்மையில் கூட மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் வாகனத்தை மறிந்த, இந்துத்துவா அமைப்பினர் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பியது கூறியது குறிப்பிடத்தக்கது.