மீராவை கதறி அழ வைத்த அபிராமி: கவினுடன் கட்டிப்பிடி வைத்தியம்

Last Modified புதன், 26 ஜூன் 2019 (22:05 IST)
மீரா மிதுன் வந்த முதல் நாளே அவர் மீது வெறுப்பை காண்பித்த அபிராமி, தனக்கென ஒரு குரூப்பை சேர்த்து மீராவுக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அபிராமி, சாக்சி, ரேஷ்மா, ஷெரின் ஆகிய நால்வரும் சேர்ந்து மீராவை கலாய்க்க, ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் மீரா, அபிராமியை தட்டி கேட்கிறார். ஆனால் இதுகுறித்து அபிராமி கேப்டன் வனிதாவிடம் புகார் செய்ய, வனிதா, மிராவிடம் சண்டைக்கு செல்கிறார். இதனால் டார்ச்சர் அதிகமாக, மீரா ஒரு கட்டத்தில் அழுகிறார்.
அதன்பின் அபிராமியும் அழ தொடங்க அவரை அவரது தோழிகள் தேற்றுகின்றனர். அப்போது ஆறுதல் சொல்ல வந்த கவினை கட்டிப்பிடி வைத்தியம் செய்தார் அபிராமி. ஒருவேளை இந்த கட்டிபிடிக்குத்தான் இந்த நாடகமோ என்று கூட எண்ண தோன்றுகிறது.

இப்போதைக்கு பிக்பாஸ் வீட்டில் இரண்டு குருப்புகள் சேர்ந்துவிட்டன. ஒன்று வனிதா தலைமையில் அபிராமி, சாக்சி, ரேஷ்மா, ஷெரின், கவின் ஆகியோர். இன்னொன்று ஃபாத்திமா தலைமையில் மீரா மிது, மதுமிதா என அடுத்த குரூப் சேர்ந்துவிட்டது. இரண்டு குரூப்புகளாக வீடு பிரிந்துவிட்டால் இனி ரணகளம்தான்.இதில் மேலும் படிக்கவும் :