1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Lady Conductor Bites Students for Travelling in Steps

படியில் பயணம் செய்த மாணவர்களை கடித்த பெண் நடத்துனர் (வீடியோ)

படியில் பயணம்
பெங்களூரில் பெண் நடத்துனருக்கும், பேருந்தில் பயணம் செய்த மாணவர்களும் நடந்த தகராறில் பெண் நடத்துவர் மாணவர்களை கடித்து வைத்தார்.
 


 


பெங்களூரில் கங்கம்மன்னாகுடி பகுதியில் அரசு பேருந்தில் மானவர்கள் சிலர் படியில் பயணம் செய்துள்ளனர். அதில் பேருந்தில் இருந்த பெண் நடத்துனருக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
வாய் தகராறு சண்டையாக மாறி பெண் நடத்துனர் பாய்ந்து சென்று மாணவர் ஒருவரை கடித்து வைத்தார். பின்னர் அவர்களை காவல்துறை அதிகாரி ஒருவர் தடுக்க முய்றசி செய்கிறார். ஆனால் அந்த பெண் நடத்துவர் ஆத்திரத்தில் மற்றொரு மாணவனின் சட்டை பிடித்து அவனையும் கடித்து வைத்தார்.
 
அதில் கோபமடைந்த அந்த மாணவன் பெண் நடத்துனரை கீழே தள்ளி விடுகிறான். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
ஜியோ சாட், வாட்ஸ் ஆப், பேஸ்புக் மெசன்ஜர்: மூன்றிலும் என்ன இருக்கு?