திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 25 மே 2023 (07:33 IST)

KYC இருந்தால் மட்டுமே ரூ.2000 மாற்ற முடியுமா? வங்கி ஊழியர்களுடன் வாக்குவாதம்..!

KYC இருந்தால் மட்டுமே வங்கியில் 2000 ரூபாய் நோட்டை மாற்ற முடியும் என வங்கி அதிகாரிகள் கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ளலாம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரு சில வங்கிகளில் KYC எனப்படும் அடையாளச் சான்று அளித்தால் மட்டுமே 2000 ரூபாய் நோட்டை மாற்றி தர முடியும் என ஒரு சில வங்கியின் ஊழியர்கள் கூறியதாகவும் இதனால் வங்கி ஊழியர்களுக்கும் 2000 ரூபாய் நோட்டை மாற்ற வந்த வாடிக்கையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தெளிவாக வங்கி ஊழியர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது
 
Edited by Siva