வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 28 ஜனவரி 2019 (14:37 IST)

குடைச்சல் கொடுக்கும் காங்கிரஸ்: பதவி விலக தயாராகும் குமாரசாமி; கர்நாடகாவில் பரபரப்பு

காங்கிரஸ் கூறினால் நான் பதவி விலகவும் தயார் என கர்நாடக முதல்வர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக குமாரசாமி பதவியேற்றார்.
 
104 தொகுதிகளில் வென்ற பாஜக, எப்போது வேண்டுமானாலும் குமாரசாமியின் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களும் குமாரசாமிக்கு குடைச்சல் கொடுத்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் முதலமைச்சர் குமாரசாமி பேசுகையில், முதல்வர் பதவி கடினமாக இருக்கிறது. கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்த வேண்டியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் எல்லையை மீறி செல்கின்றனர். அவர்களை மேலிடம் அடக்கி வைக்க வேண்டும். காங்கிரஸ் சொன்னால் நான் இப்பொழுதும் பதவி விலக தயார் என அவர் கூறினார்.