திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 23 ஜனவரி 2019 (06:48 IST)

9 பேர்களுக்கு பிரதமர் ஆசை! அமித்ஷா வெளியிட்ட தகவல்

பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மீண்டும் நரேந்திரமோடியே அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் எதிரணியில் ஒன்பது பேர் பிரதமர் ஆசையில் இருப்பதாக நேற்று மேற்குவங்கத்தில் நடைபெற்ற பிரமாண்டமான பேரணியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய பேரணியில் பங்கேற்ற தலைவர்களில் ஒன்பது பேர்களுக்கு பிரதமர் பதவி ஆசை இருப்பதாகவும், மெகா கூட்டணி என்று அவர்களே கூறிக்கொள்ளும் அந்த கூட்டணி  சுயநலத்தால் உருவானது என்றும், அந்த தலைவர்கள், 'வந்தே மாதரம்' என்றோ, 'பாரத் மாதாவுக்கு ஜெ' என்றோ, கூறவில்லை என்றும் அமித்ஷா கூறினார். மேலும் மேற்குவங்க மாநிலம் வெடிகுண்டுகள் தயாரிக்கும் இடமாக மாறி வருவதாகவும் ரவீந்திர சங்கீதம் கேட்ட மாநிலம் தற்போது வெடிகுண்டு சத்தத்தால் அவதிப்படுவதாகவும் அமித்ஷா கூறினார்.

மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரசேகரராவ், சந்திரபாபு நாயுடு, உள்பட ஒருசில தலைவர்கள் எதிர்க்கட்சி அணியில் பிரதமர் பதவிக்காக ஏற்கனவே காய்களை நகர்த்தி வரும் நிலையில் அமித்ஷாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.