பிரியங்கா காந்திக்கு பதவி ஏன்? அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி
உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இணைக்காமல் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதனால் தனிமைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ் அதிரடியாக பிரியங்கா காந்தியை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளது
காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்படுவதாக இன்று ராகுல் காந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து உபி மாநில காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் உபி மாநிலத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலின்போது பிரியங்கா காந்தி சூறாவளி பிரச்சாரம் செய்வதோடு ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு பதவி கொடுத்தது குறித்து கருத்து கூறிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'பிரியங்கா காந்திக்கு பதவி வழங்கியதன் மூலம் ஒரு குடும்பத்திற்கே முக்கியத்துவம் தருவது தெரிகிறது. எத்தனையோ காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கும்போது பிரியங்கா காந்திக்கு பதவி அளித்தது குடும்ப ரீதியானது என்று கூறியுள்ளார்.
இதற்கு ஒரு டுவிட்டர் பயனாளி பாஜகவில் உள்ள வாரிசு அரசியல்வாதிகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளார்