செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 16 மே 2018 (14:31 IST)

ஆளுனர் அழைக்காவிட்டால் வழக்கு: தயாராகிறது கர்நாடக காங்கிரஸ்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி எந்த தனிப்பட்ட கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் 112 என்ற எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் இல்லை. இருப்பினும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற அணிகள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதால், இந்த கூட்டணியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
 
ஆனால் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கவர்னர்  வஜுபாய் வாலா, பாஜகவுக்கு ஆதரவான நிலையை எடுக்கவுள்ளார் என்றும், அவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைக்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவுள்ள குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காவிடில் நீதிமன்றத்தை நாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவும், இதற்கான மனுவை தயார் செய்யும் பணியில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஈடுபட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே கவர்னர் சரியான முடிவை எடுக்காவிட்டால் நீதிமன்றம் சரியான முடிவை எடுக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.