புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 30 டிசம்பர் 2023 (11:10 IST)

கோவை - பெங்களூரு உள்பட 6 புதிய வந்தே பாரத் ரயில்.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

கோவை - பெங்களூரு உள்பட 6 புதிய வந்தே பாரத் ரயில்.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பதும் அந்த ரயில்களுக்கு பயணிகளின் ஆதரவு கிடைத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
 குறிப்பாக தமிழகத்தில் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் மற்றும் சென்னை -மைசூர் வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. இந்த நிலையில் இன்று 6 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். அதில் ஒன்று கோவை  - பெங்களூர் வந்தே பாரத் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த ரயிலையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் மூன்று வந்தே பாரத் ரயில்கள் இயங்குகின்றன. இன்று பிரதமர் தொடங்கி வைக்க உள்ள ஆறு வந்தே பாரத் ரயில்கள் பின் வருமாறு
 
1. கோவை- பெங்களூர் 
 
2. அயோத்யா - ஆனந்த் விஹார் முனையம்
 
3. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா - புதுடெல்லி
 
4. அமிதசரஸ் - டெல்லி
 
5. மங்களூர்- மடேகன்
 
6. ஜல்னா - மும்பை 
 
 
Edited by Mahendran