வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 27 டிசம்பர் 2023 (11:14 IST)

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவது எப்போது?

இந்தியாவின் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் டிசம்பர் 30ஆம் தேதி முதல் கோவை பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் இந்த ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 டிசம்பர் 30ஆம் தேதி கோவை பெங்களூர் இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்க இருப்பதாகவும் ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.  
 
கோவை பெங்களூர் இடையே இயக்கப்பட உள்ள வந்து பாரத் ரயில் பெட்டிகள் மற்றும் இஞ்சின் ஆகியவை கோவை ரயில் நிலையத்தில் தயாராக இருப்பதாகவும் இந்த ரயில் பெட்டிகள் மற்றும் இஞ்சின் சென்னை ஐசிஎப் தொழிற்சாலைகள் தயாரிக்கப்பட்டதாகவும் ரயில்வே அதிகாரி தெரிவித்தார். 
 
கோவை ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் 12 மணிக்கு பெங்களூர் ரயில் நிலையத்தை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva