திங்கள், 9 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (13:35 IST)

கேரளாவில் ரயிலை கவிழ்க்க சதி.. தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்ம நபர்கள்..!

Train Track
கேரளாவில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்த நிலையில் நூலிழையில் ரயில் விபத்தில் இருந்து தப்பித்ததாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து மும்பைக்கு நேத்ராவதி எக்ஸ்பிரஸ் நேற்று இயக்கப்பட்ட நிலையில் நேற்று காலை 9 மணிக்கு  இந்த ரயில் காசர்கோடு ரயில் நிலையத்திற்கு அருகே வந்தபோது திடீரென என்ஜின் பகுதியில் சத்தம் கேட்டது.

இதனை அடுத்து ரயில்வே பைலட் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ரயில் தண்டவாளத்தின் குறுக்கே கற்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த கற்கள் மீது ரயில் ஏறியதால் தான் என்ஜினில் சட்டம் கேட்டது என்றும் ரயிலை கவிழ்க்க சதி நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தண்டவாளத்தின் குறுக்கே கற்கள் போடப்பட்ட போதிலும் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் நூலிழையில்  விபத்தில் இருந்து தப்பியதாகவும் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

Edited by Mahendran