1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (10:43 IST)

பெண்களுக்கு இனி தனி பள்ளிகள் கிடையாது..! - கேரளாவில் அதிரடி உத்தரவு!

கேரளாவில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பள்ளிகள் செயல்படுவதை நிறுத்தி அனைத்தையும் கலப்பு பள்ளிகளாக மாற்ற உத்தரவு வெளியாகியுள்ளது.
கேரளாவில் ஆண்கள், பெண்கள் இணைந்து படிக்கும் கலப்பு பள்ளிகள் செயல்பட்டு வந்தாலும் அதிகமான அளவில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக படிக்கும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரள கல்வித்துறைக்கு புதிய உத்தரவை குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி கேரளாவில் உள்ள ஒருபால் பள்ளிகள் கலப்பு பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக பள்ளிகளில் உள்ள கழிவறை மற்றும் உள்கட்டமைப்புகளை இருபாலர் படிப்பதற்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும் என்றும், இருபாலர் கல்வி குறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.