செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (00:42 IST)

'என்ஜாய் எஞ்சாமி' பாடலுக்கு நடனமாடிய கேரள போலிஸார்

சமீபத்தில் பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் வெளியான வீடியோ பாடல் என்ஜாய் எஞ்சாமி.
.
இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இண்டிபெண்டண்ட் கலைஞர்களுக்கான உருவாக்கியுள்ள மாஜா என்றா தளத்தில் உருவாகியுள்ளது.

இப்பாடலுக்கு கர்ணன் பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ இசையமைத்து தயாரித்துள்ளார்.

இப்பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 1 கோடிக்கு மேல்  பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் கேரள மாநில போலிஸார் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடி கொரோனாவுக்கு விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக போலீஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு, கேரளா போலீஸார் வழி எப்போதும் தனி வழி எனப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.