திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (16:21 IST)

ஐகோர்ட் உத்தரவால் 1747 ஆசிரியர்களின் வேலை பறிபோகிறதா?

high court
ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக தமிழகத்தில் 1747 ஆசிரியர்களின் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காமல் பணியில் நீடிக்க தகுதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்தது என்பது தெரிந்ததே 
 
இந்த கருத்தின்படி 1747 ஆசிரியர்கள் இன்னும் ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்கவில்லை என்பதால் அவர்கள் பணியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த 1747 ஆசிரியர்களில் சிறுபான்மை பள்ளிகளில் உள்ள 1556 பேர் சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் உள்ள 591 பேர் என கூறப்படுகிறது 
 
இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை தலையிட்டு ஆசிரியர்களின் வேலையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

Edited by Mahendran