செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2024 (13:04 IST)

சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ: கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

சபரிமலைக்கு பாதுகாப்புக்காக சென்ற போலீசார் பதினெட்டாம் படியில் நின்று குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரள உயர்நீதிமன்றம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
சபரிமலை பதினெட்டாம் படியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குரூப் புகைப்படம் எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில், அந்த புகைப்படத்தை பார்த்து ஐயப்ப பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
பதினெட்டாம் படியில் போலீசார் இவ்வாறு நடந்துகொண்டது, பக்தர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், இந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. 
 
இந்த நிலையில், பதினெட்டாம் படியில் நின்று குரூப் புகைப்படம் எடுத்த 23 போலீசர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு நன்னடத்தை பயிற்சி அளிக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், இது தொடர்பாக போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 
 
Edited by Mahendran